Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM

சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க ‘டேங்க்மீ’ செயலி அறிமுகம்

சென்னை

ஒவ்வோர் ஆண்டும் குடிநீர் தேவையை சமாளிப்பது சென்னை வாழ் மக்களுக்கு சவாலாக உள்ளது. இப்பிரச்சினைக்கான தீர்வாக,ஆர்டர் செய்தால் உடனடியாக குடிநீரை சப்ளை செய்யும் வகையில் ‘டேங்க்மீ’ என்ற நிறுவனத்தை 3 எம்பிஏ மாணவர்கள் சேர்ந்துஉருவாக்கியுள்ளனர். வாடிக்கையாளர்களையும் அருகில் உள்ளதண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்களையும் இணைந்து இந்நிறுவனம் சேவையை வழங்குகிறது.

தற்போது மயிலாப்பூர், எழும்பூர், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, அம்பத்தூர், கிண்டி, சாலிகிராமம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இவர்கள் சேவையாற்றி வருகின்றனர். வரும் ஏப்ரல் மாதத்துக்குள் சென்னை முழுவதும் சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக டேங்க்மீ தண்ணீர் முன்பதிவு செயலியை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலிமூலம் சுலபமாக தண்ணீருக்கு ஆர்டர் செய்ய இயலும். தண்ணீர்டேங்கர் அளவுக்கு ஏற்ப இதில்சரியான விலை குறிப்பிடப்பட்டிருக்கும். குறித்த நேரத்தில் டெலிவரி கிடைக்கும். டேங்கர் பிரச்சினை நிலவினாலும் தொடர்ந்து சப்ளை செய்வது உறுதி செய்யப்படும்.

தங்களின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து டேங்க்மீ நிறுவனர்கள் அருண் ஆண்டர்சன், பாஹத் ஜாவித், கவுஷிக் மோகன் ஆகியோர் கூறும்போது, “பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், மால்களில் தொடர்ச்சியாக தண்ணீர் சப்ளை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். சென்னையில் எங்கள் செயல்பாடு வெற்றிகரமாக அமைந்தால், அடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய மெட்ரோ நகரங்களில் எங்களின் சேவை விரிவாக்கப்படும். தண்ணீருக்காக வாடிக்கையாளர்கள் செலுத்தும் விலையில் 70 சதவீதம் போக்குவரத்துக்கே ஆகிவிடுகிறது. இந்த புதிய செயலி மூலம் இந்த செலவை பெருமளவு குறைக்க முடியும் என உறுதியாக நம்புகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x