கலை, பண்பாட்டு கலைஞர்களுக்கு சாஸ்த்ரா சத்சங் சார்பில் ‘சங்கீத வாசஸ்பதி விருது’

கலை, பண்பாட்டு கலைஞர்களுக்கு சாஸ்த்ரா சத்சங் சார்பில் ‘சங்கீத வாசஸ்பதி விருது’
Updated on
1 min read

சாஸ்த்ரா சத்சங் அமைப்பின் சார்பில் கலை, பண்பாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய மூவருக்கு ‘சங்கீத வாசஸ்பதி’ விருது வழங்கப்பட்டது.

கலை, பண்பாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி சிறப்பிக்கும் வகையில்வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், நாமசங்கீர்த்தன கலைஞர் சவுந்தரராஜ கவதர், கர்னாடக இசைக்கலைஞர் என்.விஜய் சிவாஆகியோருக்கு ‘சங்கீத வாசஸ்பதி’ விருது சாஸ்த்ரா சத்சங் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை   முரளிதர சுவாமிகள் வழங்கி, 3 கலைஞர்களையும் கவுரவித்தார். ‘சங்கீத வாசஸ்பதி’ விருது ரூபாய் ஒரு லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த விழாவில் தியாகராஜா ஆராதனையை முன்னிட்டு திருச்சி கே.ரமேஷ் குழுவினர் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினர்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் சேதுராமன் மற்றும் துணைவேந்தர் வைத்திய சுப்ரமணியம் விழாவில் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in