திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. படம் : ம.பிரபு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. படம் : ம.பிரபு
Updated on
1 min read

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டுதோறும் மே மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெறும். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழா ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு தர்மாதிபீடமும், இரவு 7.30 மணிக்கு புன்னைமர வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.

கோயிலை சுற்றியுள்ள தென்மாட வீதி, துளசி சிங்க பெருமாள் கோயில் தெரு, சிங்காரச்சாரி தெரு, தேரடி தெரு, குளத்தை சுற்றி நடந்த புறப்பாட்டை பக்தர்கள் சாலையோரங்களில் நின்று பக்தி பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர். ஏராளமான பக்தர்கள் கோயிலில் பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.

இதனை தொடர்ந்து, திருவிழாவின் 3-ம் நாளான நாளை அதிகாலை 5.30 மணிக்கு கருட சேவைநடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வருகிற 9-ம் தேதி நடைபெற உள்ளது. திருத்தேர் உற்சவத்தினை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, பிப்ரவரி 12-ம் தேதி இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைய உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in