Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM

புதுச்சேரி வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் ஒரு வாய்ப்பு: புகார்களை பதிவு செய்ய வாட்ஸ் அப் எண் வெளியீடு

புதுச்சேரி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் சேர்ப்பது விடுபட்டிருந்தால், அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. வாக்காளர் பட்டியல் குறித்த கருத்துக்கள், புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரி மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது தொடர் திருத்தப்பணி நடைபெற்று வருவதால், விடுபட்ட வாக்காளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் வேட்புமனுத் தாக்கல் செய்யத் தொடங்கும் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், பதிவு செய்யாத தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க பூர்த்தி செய் யப்பட்ட படிவம் 6-யை தமது பகுதி வாக்குச்சாவடி நிலையஅலுவலர் அல்லது தமது தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரியின் அலுவலகத்திலோ, உதவிதேர்தல் பதிவு அதிகாரியின் அலுவலகத்திலோ சமர்ப்பிக்கலாம்.

தங்களுடைய வாக்குச்சாவடி நிலைய அலுவலர் கைபேசி எண் தலைமை தேர்தல் அதிகாரியின் ‘http : // ceopuducheryy.py.gov.in’என்ற இணையதளத்தில் தரப்பட் டுள்ளது.

மேலும் வாக்காளர்கள் ‘http://nvsp.in’ அல்லது ‘https://voterportal.eci.gov.in’ என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். இந்தச் சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமானது.

மேலும் விவரங்கள் , உதவிக்கு பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பொது மக்கள் தங்கள் குறைகள், கருத் துக்கள், புகார்களை புதுச்சேரி பகுதி - 89033 31950, காரைக்கால் பகுதி - 89036 91950, மாஹே பகுதி - 80898 01950, ஏனாம் பகுதி - 73824 91950 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x