டெல்லியில் ராகுல் காந்தியுடன் ப.சிதம்பரம், தங்கபாலு சந்திப்பு: இளங்கோவன் மீது புகார்?

டெல்லியில் ராகுல் காந்தியுடன் ப.சிதம்பரம், தங்கபாலு சந்திப்பு: இளங்கோவன் மீது புகார்?
Updated on
1 min read

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தங்கபாலு சந்தித்துப் பேசினர்.

டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கோபிநாத், மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த தலைவர்களை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாக ராகுலிடம் அவர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இளங்கோவனை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in