Published : 12 Nov 2015 11:46 AM
Last Updated : 12 Nov 2015 11:46 AM

கனமழையால் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 9.11.2015 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி இறந்தார்.

10.11.2015 அன்று நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், தெங்குமரஹாடா கிராமத்தைச் சேர்ந்த சின்னவன் என்பவரின் மனைவி கலாமணி; சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், செம்மநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் மணிவாசகம்; கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தைச் சேர்ந்த சிவனடியார் என்பவரின் மகன் கணேசன்; பண்ருட்டி வட்டம், கருகை கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மனைவி அலமேலு; விசூர் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் என்பவரின் மனைவி அஞ்சலை; ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் பரசுராம்; குமணன்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் வேலு; புவனகிரி வட்டம், வடகிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜம்புலிங்கம் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.

11.11.2015 அன்று கடலூர் மாவட்டம், குறிஞ்சிபாடி வட்டம், எல்லப்பன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகன் விக்னேஷ்; கல்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் என்பவரின் மகன் ராமலிங்கம்; மகள் லோகநாயகி; பூதம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தனசிங் என்பவரின் மகன் தனசேகர்;

ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

10.11.2015 அன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. ஆரூன் என்பவரின் மகன் ஞானமுத்து; சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பு என்பவரின் மகன் நாகராஜன்; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மனைவி திருமதி விசாலாட்சி; கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், அருமனை கிராமத்தைச் சேர்ந்த செல்லையன் என்பவரின் மகன் ராமசந்திரன்; ஆகியோர் மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x