புத்துணர்வு முகாமுக்குத் தயாராகிறது திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை

புத்துணர்வு முகாமுக்குத் தயாராகிறது திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை
Updated on
1 min read

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை யானைகள் புத்துணர்வு முகாமுக்குச் செல்லத் தயாராகி வருகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் திடீரென்று மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை, பாகனைத் தாக்கியது. இதில், அவர் உயிரிழந்தார்.

அந்த யானையை அப்போதைய கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இனை இயக்குநர் மருத்துவர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவர்கள் ஆலோசனையின்படி கோயில் யானை தெய்வானை, புத்துணர்வுக்காக திருச்சி எம்.ஆர்.பாளையம் கொண்டு செல்லப்பட்டது.

தற்போது 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போதைய கால்நடை பராமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராஜதிலகன் தலைமையில் வனத்துறை கால்நடை அலுவலர் டாக்டர் சுகுமார், கால்நடை மருத்துவர் முத்துராமலிங்கம் ஆகிய குழுவினர் நேற்று திருச்சி எம்ஆர்.பாளையம் சென்று யானையை திருப்பரங்குன்றத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.

இந்நிலையில் ஒவ்வோர் ஆண்டும் கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெறும் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமிற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, திருப்பரங்குன்றம் தெய்வானை, அழகர்கோவில் சுந்தரவள்ளி தாயார் ஆகிய 3 கோவில் யானைகளும் மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.

தற்போது விரைவில் தேக்கம்பட்டியில் துவங்கும்நிலையில் மதுரை மாவட்ட கோயில் யானைகளை அந்த முகாமிற்கு கால்நடை மருத்துவக்குழுவினர் தயார்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கால்நடை மருத்துவக்குழுவினர் மேற்பார்வையில் மீனாட்சியம்மன் கோயில் யானையோடு திருப்பரங்குன்றம் யானை தெய்வானையும் இணைந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in