

சிண்டிகேட் வங்கியின் வேளாண் கடன் வழங்கும் முகாம் தொடங்கப் பட்டுள்ளது. நவம்பர் 30-ம் தேதி வரை முகாம் செயல்படும்.
இது தொடர்பாக சிண்டிகேட் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் என்.சுவாமிநாதன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் துறையில் உற்பத் தித் திறனை மேம்படுத்த கடன் வழங்குவதில் சிண்டிகேட் வங்கி சிறப்பிடம் பெற்றுள்ளது. விவசாயி கள் சிரமம் இல்லாமல் வேளாண் கடன் பெறுவதற்காக நவம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
முகாமின்போது வங்கியின் சென்னை மண்டலத்தில் உள்ள நகரம், சிறு நகரம் மற்றும் கிராம கிளைகளில் விவசாய வாடிக்கை யாளர்களுக்கும், கிராம வாடிக்கை யாளர்களுக்கும் தேவைக்கேற்ப வேளாண் கடன் வழங்கப்படும். வாடிக்கையாளர்களின் கூடுதல் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, இதுவரை வங்கி வசதி களை பெறாதவர்களுக்கும் இக் கடன் திட்டம் உதவும். குறைவான வட்டியில் பலவிதமான விவசாயக் கடன்களைப் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.