

திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி முனிசிபல் உயர் நிலைப்பள்ளி, ஆவடி ஹவுசிங் போர்டு பள்ளி, முகப்பேர் கிழக்கு ஆடவர் பள்ளி மற்றும் மகளிர் பள்ளி, புங்கத்தூர் ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் மகளிர் பள்ளி, மணவாள நகர், அயனம்பாக்கம், திருவொற்றியூர், முகப்பேர் மேற்கு, சுப்பாரெட்டி பாளையம், நாப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
பிற அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்றும் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.