எம்எல்ஏ-வை அடித்த விஜயகாந்த்: நிவாரண உதவியின்போது பரபரப்பு

எம்எல்ஏ-வை அடித்த விஜயகாந்த்: நிவாரண உதவியின்போது பரபரப்பு
Updated on
1 min read

நிவாரண உதவிகள் வழங்குவதற்காக பண்ருட்டி வந்த விஜயகாந்த், இடையிடையே குறுக்கிட்ட எம்எல்ஏ சிவக்கொழுந்தை முதுகில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ருட்டியை அடுத்த பெரியாக்காட்டுப்பாளையம் கிராமத்திற்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வந்திருந்தார்.

அப்போது வாகனத்தில் இருந்தபடியே விஜயகாந்த் நிவாரண உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முயன்ற போது, பண்ருட்டி தேமுதிக எம்எல்ஏ பி.சிவக்கொழுந்து இடையிடையே குறுக்கிட்டார். இதனால் கடுப்பான விஜயகாந்த், 'ஒரு ஓரமா நிற்கமாட்டியா ?' என கேட்டவாறு அவரை முதுகில் 4 முறை அடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இருப்பினும் எம்எல்ஏ சிவக்கொழுந்து அடியை வாங்கிக் கொண்டு, குனிந்தவாறு நின்று கொண்டிருந்தார்.

பொதுமக்கள் முன்னிலையில் எம்எல்ஏ சிவக்கொழுந்து, விஜயகாந்திடம் அடி வாங்குவது புதிதல்ல. ஏற்கெனவே 2006 சட்டப் பேரவைத் தேர்தலின் போதும், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதும், சிவக்கொழுந்துக்கு கன்னத்தில் அறை விழுந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, 2011-ல் விருத்தாசலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in