

பணியின்போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பத்துக்கு உடனடி தேவைக்காக வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் அரசு அடிப்படை ஊழியர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை யாராக இருந்தாலும் அவர் பணியின்போது இறந்தால், அவரது குடும்பத்துக்கு உடனடி செலவுக்காக கடந்த 1997-ம் ஆண்டு முதல் ரூ.5 ஆயிரம் முன்பணம் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, அரசு சார்பில் வழங்கப்படும் ஒருமுறை நிவாரணத் தொகையில் முன்பணம் கழித்துக் கொள்ளப்படும்.
இந்நிலையில், இந்தாண்டு பிப்ரவரி மாதம், ஒரு முறை வழங்கப்படும் தொகையானது ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி முதல் அரசு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும் உடனடி தேவைக்கான தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையி்ல் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.