Published : 02 Feb 2021 02:45 PM
Last Updated : 02 Feb 2021 02:45 PM

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் - 2ஆம் கட்டச் சுற்றுப்பயணம்: திமுக அறிவிப்பு

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் 2ஆம் கட்டச் சுற்றுப்பயண விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுகவின் இன்றைய செய்தி வெளியீடு:

''பிப்.4-ம் தேதி 2-ம் கட்டச் சுற்றுப்பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். ராமநாதபுரம் மாவட்டம் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் மதியம் 1 மணிக்குப் பேசுகிறார்.

மறுநாள் 5-ம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம் ரோடு கலைஞர் திடலில் பேசுகிறார். மதியம் 1 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, ஸ்ரீவைகுண்டம் நட்டாச்சி ஊராட்சி, பட்டாண்டிவிளையில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார்.

அதேபோல 6-ம் தேதி காலை 8 மணிக்கு, கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்திலும், மதியம் 1 மணிக்கு அம்பாசமுத்திரம் வீரவநல்லூர் பேரூராட்சிப் பகுதியிலும் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார்.

மேலும் பிப்ரவரி 7-ம் தேதி காலை 8 மணிக்கு தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட, சங்கரன்கோவில் அண்ணா திடலிலும், மதியம் 1 மணிக்கு விருதுநகர் பட்டம்புதூர் ஊராட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் பேசுகிறார்.

2-ம் கட்டச் சுற்றுப்பயணத்தின் இறுதியாக 8-ம் தேதி மதியம் 1 மணிக்கு, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பத்தூர், கே.வைரம்பட்டி ஊராட்சியில் நடைபெறும் நிகழ்சியில் கலந்துகொண்டு தனது பிரச்சாரத்தை ஸ்டாலின் நிறைவு செய்கிறார்''.

இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x