

இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலை விவகாரத்தில் போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து பல சந்தேகங்கள் உள்ளன என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக் கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:
கொலை செய்யப்பட்ட பாடி சுரேஷின் அலுவலகம், காவல் இணை ஆணையர் அலுவலகத்துக்கு அருகிலேயே இருந்தும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது வியப்புக்குரியது. காவல் துறையினரின் நடவடிக் கைகள் குறித்து எங்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் உள்ள 4 கண்காணிப்பு கேமராக்களிலும் கொலை சம்பவமோ, கொலை காரர்களின் படமோ பதிவாக வில்லை என்று பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. அப்படி யானால் அந்த கேமராக்கள் வெறும் காட்சிப் பொருட்களா?
சுரேஷ் உடலை அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வழியை மாற்றி மாற்றி போகச் செய்து வன்முறைக்குத் தூண்டி யது அதிகாரிகளா? பொது மக்களா? பல இடங்களில் இந்து முன்னணித் தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். ஆனால், அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் தர மறுப் பது ஜனநாயகத்துக்கும் சட்டத் துக்கும் புறம்பானதல்லவா?
இந்து முன்னணியின் பல முக்கியப் பிரமுகர்களுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதங் களை காவல் துறையிடம் கொடுத்தும், அதை அலட்சியம் செய்ததால்தானே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. சுரேஷ் கொலை குறித்து போலீஸார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர் என்பது மக்களை திசைதிருப்பும் முயற்சி.
இந்தப் படுகொலைக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளியைக் கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிப்பதன் மூலம் இனிமேல் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் காவல் துறை யினரை முடுக்கிவிட வேண்டும்.
மேலும் சுரேஷின் குடும்பத் துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்குவதோடு, அவரது மனைவிக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.