

வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 1972-ம் ஆண்டு பயிற்சி பெற்ற முதல் நிலை காவலர்கள் 48 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு நேற்று நடை பெற்றது.
தமிழக காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் கடந்த 1972-ம் ஆண்டு முதல் நிலை காவலர் பணிக் காக 1,000 பேர் தேர்வு செய் யப்பட்டனர். இவர்களுக்கு. வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மற்றும் கோவையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிஅளிக்கப்பட்டது. பயிற்சியை நிறைவு செய்தவர்கள் மாநிலத் தின் பல்வேறு காவல் நிலையங் களில் பணியாற்றி துணை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து வரை பதவி உயர்வு, பணி ஓய்வும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வேலூர் காவ லர் பயிற்சி பள்ளியில் 1972-ல் பயிற்சி பெற்ற முதல் நிலை காவலர்களின் சந்திப்பு நிகழ்ச்சி48 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது. இதில், ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராஜா, ஜெயகிருஷ்ணன், கருணாகரன், காவல் ஆய்வாளர்கள் பாஸ்கரன், கலியமூர்த்தி ஆகியோர் தலை மையில் சுமார் 150 பேர் நேற்று சந்தித்துக் கொண் டனர். அப்போது, காவல் பணியில் தாங்கள் சந்தித்த சவால்கள், சட்டம்-ஒழுங்குபிரச்சினைகள் குறித்த நினை வுகளையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். பின்னர், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.