தமிழகத்தில் வெள்ள சேதத்தை மதிப்பிட மத்திய குழு விரைவில் வருகிறது: முதல்வர் ஜெயலலிதாவிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

தமிழகத்தில் வெள்ள சேதத்தை மதிப்பிட மத்திய குழு விரைவில் வருகிறது: முதல்வர் ஜெயலலிதாவிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
Updated on
2 min read

தமிழகத்தில் வெள்ள சேதத்தை மதிப்பிட மத்திய குழு விரைவில் வருகிறது. முதல்வர் ஜெயலலிதா வின் கோரிக்கையை ஏற்று குழுவை அனுப்பி வைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த 8-ம் தேதி முதல் பரவலாக கனமழை பெய்து வரு கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, புதுச்சேரி அருகே கடந்த 9-ம் தேதி இரவு கரையைக் கடந்தது. அப்போது கொட்டித் தீர்த்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அப்பகுதி யில் முகாமிட்டு நிவாரணப் பணி களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வங்கக்கடலில் மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 13-ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. 15-ம் தேதி முழுவதும் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையால் 3 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறின. பெரும் பாலான ஏரிகள் நிரம்பி வழிந்தன. சில ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வெளியேறியது. குடியி ருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அடை யாறு, கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கரையோர பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபடுத் தப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதி களில் அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளை முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். அதிகாரிகள், அமைச்சர்களை அழைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் உத்தரவிட்டு வருகிறார்.

அதிகாரிகள் அறிக்கை

தற்போது மழை குறைந் துள்ளதால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் படிப்படியாக சகஜ நிலை திரும்பி வருகிறது. பல மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் வெள்ள சேதங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 11.40 மணிக்கு தலைமைச் செய லகம் வந்த முதல்வர் ஜெயல லிதா, வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந் தார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, வெள்ள சேதத்தை மதிப்பிட மத்தியக் குழுவை அனுப்பி வைக்கும்படி கோரினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுக்களை அனுப்பி, உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக் கையை தமிழக அரசு எடுத்துள் ளது தொடர்பாக விளக்கினார். மேலும், தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட மத்திய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மாநில அரசின் காவல், தீயணைப்பு உள்ளிட்ட படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை குறித்தும் விரிவாக எடுத்துரைத்த முதல்வர், உடனடி மீட்புக்கு உதவிய உள்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

பேரிடர் நிவாரண நிதி

இதுதவிர, தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மத்திய அரசு நிதியுதவியை பெறும் வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக அரசு அதிகாரிகள் பாதிப்புகளை கணக்கெடுத்து வருவதாகவும், இதுகுறித்த விரிவான அறிக்கை வரும் 23-ம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். எனவே, விரைவில் மத்திய அரசு ஒரு குழுவை தமிழகத்துக்கு அனுப்பி, வெள்ள சேதங்களை களமதிப்பீடு செய்வதுடன், குழு பரிந்துரைக்கும் உதவியை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரை முதல்வர் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு வெள்ள சேதம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்ததும், குழுவை அனுப்பி வைப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரும் 23-ம் தேதி மத்திய அரசிடம் வெள்ள பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை அளித்ததும், அடுத்த சில தினங் களிலேயே மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தக் குழுவில், தேசிய பேரிடர் நிவாரண குழு அதிகாரிகள், மத்திய வேளாண்மை, பொதுப் பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் இடம்பெறுவர் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in