செல்வத்தைப் பெருக்க மியூச்சுவல் பண்ட் முதலீடே சிறந்த வழி: நிதி ஆலோசகர்கள் கருத்து

செல்வத்தைப் பெருக்க மியூச்சுவல் பண்ட் முதலீடே சிறந்த வழி: நிதி ஆலோசகர்கள் கருத்து
Updated on
1 min read

செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதே சிறந்த வழி என்று முதலீட்டு ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி தெரிவித்தார்.

சாமானியர் முதல் செல்வந்தர் வரை செல்வத்தைப் பெருக்கிக் கொள்வது எப்படி என்பது குறித்து சென்னையில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலீட்டு ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, மிரே அசெட் நிறு வனத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.அனந்தராமன் ஆகியோர் பேசியதாவது:

அமெரிக்காவில் 50 சதவீதத்துக் கும் மேற்பட்டோர் மியூச்சுவல் பண் டில்தான் முதலீடு செய்துள்ளனர். ஆனால், இந்தியாவில் 2 முதல் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே மியூச் சுவல் பண்ட் பற்றிய விழிப்புணர்வு உள்ளது. அதனால்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

மியூச்சுவல் பண்டில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய லாம். அனைவரிடமும் பெறும் மொத்த தொகையை இந்தியாவில் உள்ள 6,400 கம்பெனிகளில் எதில் முதலீடு செய்யலாம் என்பதை அனுபவ அறிவைக் கொண்டு முடிவு செய்கின்றனர். முதலீடுக்கு ஏற்ற பங்குத் தொகை முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இதில் ரிஸ்க் இல்லை என்று சொல்லமாட்டோம். சந்தையின் ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப அது இருக்கத்தான் செய்யும்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நீ்ண்டகாலத்துக்கு (15 ஆண்டுகள்) முதலீடு செய்தால் மிகப்பெரிய பலன் கிடைக்கும். குறைந்த காலத்துக்கான திட்டங் களும் உள்ளன. குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அனைத்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் இந்திய பங்கு வர்த்தக கட்டுப்பாட்டு அமைப்பில் (செபி) பதிவு செய்யப்பட்டவை ஆகும்.

பான் கார்டு நகல், முகவரிச் சான்று, வண்ண புகைப்படம், காசோலை ஆகியவை இருந்தால் சிறிது நேரத்தில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் சேரலாம். கார், வீடு, குழந்தையின் கல்வி, திருமணம், விடுமுறை சுற்றுலா என எந்தத் தேவைக்கும் உங்களது சேமிப்பை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்து பயன்பெற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விக்ரம் மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.சந்தானம் செய்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in