மு.க.ஸ்டாலினிடம் நிதியுதவி கோரிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு எம்எல்ஏ நிதியுதவி

பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மோகனாவுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மோகனாவுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார்.
Updated on
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கந்தநேரி கிராமத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கலந்துகொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதில், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அன்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மோகனா (48) என்பவர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையில்லாமல் ஏழ்மையில், ஆதரவற்ற நிலையில் சிரமப்படுவதாகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து, திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், அன்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மோகனாவை, திமுக மத்திய மாவட்ட அலுவ லகத்துக்கு நேற்று வர வழைத்து, தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவியை வழங்கினார். அப்போது, திமுக ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in