Published : 31 Jan 2021 12:06 PM
Last Updated : 31 Jan 2021 12:06 PM

காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பாரபட்சம்: சுகாதாரத்துறை மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டு

காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. (உள்படம்) சமூக ஆர்வலர் ஆதி ஜெகநாதன்.

காரைக்குடி

காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை யினர் பாரபட்சம் காட்டுவதாக, ஆதா ரத்துடன் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கியதும், 2014-ம் ஆண்டு காரைக்குடி தாலுகா அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது.

இங்கு தினமும் 400-க்கும் மேற் பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல் கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறு கின்றனர். சராசரியாக மாதம் 150 குழந்தைகள் பிறக்கின்றன. மேலும் எந்த ஊரிலும் இல்லாத நிலைமையாக 2 இடங்களில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பொது மருத்துவம், புறநோயாளிகள் பிரிவு, அவசரச் சிகிச்சை, பல், கண் சிகிச்சை, ரத்த வங்கி, சித்தா பிரிவு ரயில்வே பீடர் சாலையில் உள்ள மருத்துவமனையிலும், மகப்பேறு, குழந்தைகள் நலம், மருத்துவக் காப்பீடு சிகிச்சை உள்ளிட்டவை, சூரக்குடி ரோட்டில் உள்ள மருத்துவமனையிலும் செயல்படுகின்றன. இதனால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவர்கள் நியமனத் திலும், வசதிகளை ஏற்படுத்துவதிலும் காரைக்குடி மருத்துவமனைக்கு பார பட்சம் காட்டுவதாக ஆதாரத்துடன் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமூக ஆர்வலர் ஆதி ஜெகநாதன்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதி ஜெகநாதன் கூறியதாவது:

காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாறியதும் மருத் துவர்கள் எண்ணிக்கை உயரும், வசதிகள் பெருகும் என நினைத்தோம். ஆனால் தாலுகா மருத்துவமனையாக இருந்தபோது இருந்த 23 மருத்துவர், 42 பணியிடங்களே இன்றும் உள்ளன. படுக்கை வசதி 222 உள்ள போதிலும் மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

ஆனால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாவட்ட மருத்துவ மனையில் 45 மருத்துவர்கள், 108 நர்சுகள், திருச்சி மாவட்டம், மணப்பாறை மாவட்ட மருத்துவமனையில் 39 மருத் துவர்கள், 77 செவிலியர்கள் உள்ளனர். மேலும் காரைக்குடி மருத்துவமனை இரண்டு இடங்களில் செயல்படுவதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இரண் டையும் ஒரே வளாகத்தில் அமைக்க வேண்டும்.

இதுதவிர காரைக்குடியில் மாவட்ட மருத்துவமனை மற்றும் காரைக்குடி தாலுகாவில் கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பள்ளத்தூர், கண் டனூர் ஆகிய இடங்களிலும் அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இதனால் மருத்துவ இணை இயக்குநர் அலுவலகத்தை காரைக்குடிக்கு மாற்ற வேண்டும், என்று கூறினார்.

இதுகுறித்து மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் கூறு கையில், ‘கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமனம், வசதியை அதிகரிப்பது குறித்து அரசிடம் தெரிவித்துவிட்டோம் என்றார்.காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. (உள்படம்) சமூக ஆர்வலர் ஆதி ஜெகநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x