

காரைக்குடி அருகே திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கானாடுகாத்தான், சூராக்குடி, திருவேலங்குடி உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடந்தன. இதில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் திமுக எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
கானாடுகாத்தானில் ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.4 லட்சம், சூரக்குடி ஊராட்சி புறவழிச் சாலையில் ஹைமாஸ் விளக்கு அமைக்க ரூ. 5 லட்சம், திருவேலங்குடி பள்ளியில் சைக்கிள் நிறுத்தம் அமைக்க ரூ.6 லட்சம் ஒதுக்கி உள்ளார். இப்பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க வலியுறுத்தி உள்ளார்.
நிதி ஒதுக்கிய எம்எல்ஏவை திமுக மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, ஊராட்சித் தலைவர் முருகப்பன், மற்றும் கிராம மக்கள் பாராட்டினர்.கே.ஆர்.பெரியகருப்பன்