

சீர்காழி இரட்டைக் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதா னவர்களுக்கு பிற மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் தொடர்புள் ளதா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசிக்கும் மொத்த நகை வியாபாரியான தன் ராஜின்(50) வீட்டுக்குள் கடந்த 27-ம் தேதி காலை நுழைந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மணிபால்சிங், ரமேஷ், மணிஸ் ஆகிய 3 கொள்ளையர்கள், தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கொன்று, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் தன்ராஜும், அவரது மருமகள் நிக்கலும் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
இரட்டைக் கொலை, கொள்ளை சம்பவத்தில் சீர்காழி காவல் நிலையத்தில் தன்ராஜ் கொடுத்துள்ள புகாரில், ராஜஸ் தானைச் சேர்ந்த மணிபால்சிங், ரமேஷ், மணிஸ் ஆகிய 3 கொள்ளையர்கள், தனது மனைவி, மகனைக் கொன்றுவிட்டு, 12.50 கிலோ தங்கம், ரூ.6.75 லட்சம் ரொக்கம், கார் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த 4 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் ரமேஷ், மணிஸ், கருணாராம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 12.50 கிலோ தங்கம், ரூ.6.75 லட்சம் ரொக்கம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீஸாரை தாக்கியதால் மணிபால்சிங் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீதும், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக் கப்பட உள்ளது. மேலும், தேசிய குற்ற ஆவண காப்பகத்துக்கு 3 கொள்ளையர்களின் கைரேகை மற்றும் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என ஆய்வு செய்யப்பட உள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த கணேஷ்ராம் என்பவரிடம், தனக்கு தேவையான வெள்ளி நகைகளை கிலோ கணக்கில் தன்ராஜ் ஆர்டர் கொடுப்பது வழக்கம். அந்த நகைகளை தன் ஊழியர் மூலம் தன்ராஜுக்கு கணேஷ்ராம் அனுப்பி வந்துள்ளார். அந்த ஊழியர், தன்னுடன் பாதுகாப்புக்காக மணிஸை தன்ராஜின் வீட்டுக்கு தொடர்ச்சியாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தன்ராஜின் வீட்டை நோட்ட மிட்ட மணிஸ், தன் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு, இச்சம்பத்தை நிகழ்த்தி யுள்ளது தெரியவந்துள்ளது.
எனவே, அடகு கடை மற்றும் நகைக் கடை நடத்தி வருபவர்கள் மொத்தமாக கிலோ கணக்கில் நகைகளை வீட்டில் வைக்கக்கூடாது. வங்கி லாக்கர்களில்தான் வைக்க வேண்டும் என நகைக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதற் காக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நாதா தலைமையில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.