Published : 28 Nov 2015 08:31 AM
Last Updated : 28 Nov 2015 08:31 AM

ஆரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் பலி: இன்னொருவர் உயிருடன் மீட்பு

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் சடலமாக மீட்கப்பட்டார். ஆரணி ஆற்றில் மட்டும் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந் துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலும் அதையொட்டிய ஆந்திர மாநி லத்திலும் தீவிர மழை பெய்ததால் பீச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

ஆரணியைச் சேர்ந்தவர் சேகர் (21). பொன்னேரி அரசுக் கல்லூரி மாணவர். அவரது நண்பர் பார்த்தி பன் (19). இருவரும் நேற்று முன் தினம் கவரப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பம் அணைக்கட்டு பகுதியில் ஆரணி ஆற்றில் குளித் துக் கொண்டிருந்தனர். திடீரென இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் பார்த்திபன் ஆற்றுக்குள் இருந்த பெரிய பாறை ஒன்றை இறுக்க மாக பிடித்துக்கொண்டு உயி ருக்கு போராடினார். ஆனால் சேகர் வெள்ள நீரில் அடித்துச் செல் லப்பட்டார். தகவலறிந்த கும்மிடிப் பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் பார்த்திபனை மீட்டனர்.

சேகரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், நேற்று காலை ஏ.என்.குப்பம் அணைக்கட்டு அருகே மேல்முதலம்பேடுவில் சேகர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பேர் ஆரணி ஆற்றில் அடித் துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள உயிரிழப்பையும் சேர்த்து, பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந் துள்ளது. திருவள்ளூர் மாவட்டத் தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ள ஆரணி, கூவம், கொசஸ் தலை ஆறு உள்ளிட்ட நீர் நிலை களில் யாரும் குளிக்க வேண்டாம், வேடிக்கை பார்க்கச் செல்ல வேண் டாம் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

சிறுவன் பலி

திருத்தணி அருகே உள்ள ரங்காபுரத்தைச் சேர்ந்த தீன தயாளன் மகன் அரியந்த்(14). அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை அங்கிருந்த ரங்காபுரம் ஏரிக்கரை பகுதிக்குச் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால் தவறி ஏரிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x