

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் ஆவின் பால் கலப்பட வழக்கின் விசாரணையில், மேலும் 5 பேரை சேர்த்து சிபிசிஐடி போலீஸார் குற் றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே வெள்ளிமேடுப் பேட்டை போலீஸார், கடந்த ஆகஸ்ட் மாதம் ரோந்து சென்ற போது, அங்குள்ள ஊரல் கிராமத் தில் லாரியை நிறுத்தி ஆவின் பாலில் கலப்படம் செய்வதை கண்டுபிடித்தனர். ஆவின் பால் கலப்படத்தில் ஈடுபட்ட திருவண் ணாமலை மாவட்டம், நாயுடுமங் கலத்தைச் சேர்ந்த சுரேஷ், ரமேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸூக்கு மாற்றப்பட்டது.
11 பேர் கைது
ஏடிஎஸ்பி ஸ்டீபன் ஏசுபாதம் தலைமையிலான சிபிசிஐடி போலீ ஸார் நடத்திய விசாரணையில், முக்கிய நபராக செயல்பட்ட, சென்னையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் வைத்தியநாதன் உள் ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து ஆவின் பால் கலப் பட வழக்கில், வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்ளிட்ட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், கடந்த செப்டம்பர் மாதம் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக, நீதி மன்றத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது.
5 பேர் தலைமறைவு
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் பாண்டி, குமார், சிலம்பு, பால் வியாபாரிகள் தினகரன், முனுசாமி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீஸார், தொடர்ந்து தலைமறைவாக உள்ள 5 பேரை யும் தேடி வருகின்றனர்.
இதனிடையே விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.