சசிகலா விடுதலை; அதிமுக வெற்றி பாதிக்கப்படாது: வாசன்

சசிகலா விடுதலை; அதிமுக வெற்றி பாதிக்கப்படாது: வாசன்
Updated on
1 min read

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசு தினத்தில்நாட்டின் மதிப்பை பாதிக்கும் வகையில் சில சமூகவிரோத சக்திகள் டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டுள்ளன. சிலரின் தூண்டுதலின் பெயரால் டெல்லியில் ஒரு சில மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

தேர்தலுக்கு 3 மாதம் இருக்கும்போது, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுவதாக திமுக தலைவர் அறிவித்திருப்பது, வாக்காளர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம். சசிகலா விடுதலை, அதிமுக கூட்டணியின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது. அதிமுக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in