

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 இளைஞர்களில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆந்திர மாநிலப் பகுதியான பீச்சாட்டூர் ஏரியிலிருந்து, உபரி நீர் கடந்த ஒரு வாரமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியபாளை யம் அருகே உள்ள ராள்ளபாடியை சேர்ந்த மணிகண்டன் (20), ஜெகன் (21) ஆகிய இருவரும் கடந்த 20-ம் தேதி ஆரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இருவரையும் தேடும் பணியில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய தீயணைப்பு நிலையங் களின் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை பாலேஸ்வரம், அணைக்கட்டு பகுதியில் மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்டார். ஜெகனை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்ற னர்.