Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

தருமபுரி மாவட்டம் இருளப்பட்டி ஊராட்சியில் தேசிய கொடி ஏற்றிய தூய்மை பணியாளர்

தருமபுரி மாவட்டம் இருளப்பட்டி ஊராட்சியில் நடந்த குடியரசு தின விழாவின்போது தேசியக் கொடியை ஏற்றி வைத்த தூய்மைப் பணியாளர் பழனியம்மாள்.

தருமபுரி

இருளப்பட்டி ஊராட்சியில் குடியரசு தின விழாவின்போது, கரோனா தடுப்பு முன் களப் பணியாளரை தேசியக் கொடி ஏற்றச் செய்து ஊராட்சி மன்ற தலைவர் கவுரவப்படுத்தினார்.

தருமபுரி மாவட்டம்பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ளது இருளப்பட்டி ஊராட்சி. குமார் என்பவர் ஊராட்சித் தலைவராக உள்ளார். ஊராட்சி அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா நடந்தது.

ஊராட்சி அலுவலகங் களில் வழக்கமாக குடியரசு மற்றும் சுதந்திரதின விழாக்களின் போதுபெரும்பாலும் ஊராட்சித் தலைவர்கள் தான் தேசியக் கொடியை ஏற்றி வைப்பர்.

கரோனா தடுப்புப்பணி

இருளப்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்தசுதந்திர தின விழாவின் போது, கரோனா தொற்று தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட முன்களப் பணியாளரான மூத்ததூய்மைப் பணியாளர் பழனியம்மாள் என்பவர் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் தேசியக் கொடியை ஏற்றச் செய்தார்.

அர்ப்பணிப்புடன் பணி

இதுதவிர, இருளப்பட்டி ஊராட்சியில் பணியாற்றும் 10 தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி காரணமாக இந்த ஊராட்சியில் இதுவரை யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்பதையும் விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் குறிப்பிட்டு பேசி தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x