Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவை முன்னிட்டு மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு விழா இன்று நடக்கிறது. அதைத் தொடர்ந்து மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையில் போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் இருந்து கண்ணகி சிலை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை இந்த தடை நீடிக்கும். எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலையில் திருப்பிவிடப்படும். பிற வாகனங்கள் (மாநகர பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் திருப்பிவிடப்படும். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பிவிடப்படும். மயிலாப்பூர் சந்திப்பில் இருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் திருப்பி விடப்படும்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பிலிருந்து காரணீஸ்வர் கோயில் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படும். அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் திருப்பி விடப்படும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

காமராஜர் சாலையில் போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் இருந்து கண்ணகி சிலை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை இந்த தடை நீடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x