

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 நாட்களுக்கும் மேலாக மழை பொழிந்து வருதால், பல்வேறு பகுதி களில் தேங்கும் மழை நீராலும், மோசமான சாலையாலும் பொதுமக்கள் அவதி யுற்று வருகின்றனர்.
அம்பத்தூர், பூந்தமல்லி, திருத் தணி, திருவள்ளூர், செம்பரம் பாக்கம், பொன்னேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில், கடந்த 6-ம் தேதி இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, 128 மி.மீ. பெய்துள்ளது.
மழையின் காரணமாக ஆவடி, திருநின்றவூர், வேப்பம்பட்டு உள் ளிட்ட பகுதிகளில், குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளன. குறிப்பாக ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதே போல், சென்னை- திருப் பதி நெடுஞ்சாலையில், திருநின்ற வூர், வேப்பம்பட்டு, தொழுவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே சாலைகள் இருந் தன. இந்நிலையில் மழையால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உருமாறியுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
திருவள்ளூர்மாவட்டத்தில் பொழியும் இந்த மழையினால் திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட வட்டப் பகுதிகளில் பல குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அரசு பள்ளி மற்றும் சமூக நலக் கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளும் நடந்து வருகின்றன.