Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிப்.28-ல் முனைவர் பட்ட சேர்க்கை நுழைவுத் தேர்வு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு பிப்.28-ல் நடைபெற உள்ளதாக துணைவேந்தர் கோ.பால சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 72-வது குடியரசு தின விழாவில், அவர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசியது:

தமிழ் மொழி, பண்பாடு, தமிழர் வரலாறு ஆகியவை குறித்து பல்வேறு ஆய்வு களை முன்னெடுத்து, பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியை அடுத்த நிலைக்கு உயர்த்துவது நம் கடமை. தமிழக அரசு நிதியிலிருந்து கல்வியாளர்களுக்கு வழங் கப்பட்ட ஆய்வு நிதியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வறிக்கைகள் பெறப்பட்டு வருகின் றன.

இணையவழி வானொலிச் சேவைகள் தொடங்கப்பட்டுள் ளன. நீண்ட காத்திருப்பில் உள்ள புதிய நூல்களும் மறுபதிப்புகளும் விரைவில் வெளிவர இருக்கின்றன.

கரோனா ஊரடங்கு காலத் திலும், தொய்வில்லாமல் சில முக்கியமான பணிகளைச் செய்துள்ளோம். தமிழகக் கல்வி நிலையங்களிலேயே முதன் முதலாக ஒரு இணையவழி உரைத்தொடரை முன்னெடுத்து, சிறந்த ஆளுமைகளைக் கொண்டு 25 உரைகள் நடத்தப்பட்டுள்ளன. இணைய வழியாக பல கருத்தரங்குகள், பணிப் பயிலரங்குகள் நடத்தப் பட்டுள்ளன.

முதுநிலை மற்றும் ஐந்தாண்டு முதுநிலைப் படிப்புகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன முனைவர் பட்டச் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு பிப்.28-ல் நடைபெற உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x