டெல்லியில் விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.

டெல்லியில் விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
Updated on
1 min read

குடியரசு தினத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் தாக்குதல் உலக அரங்கில் நமது நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் பாஜக அரசின் காட்டுமிராண்டித் தனத்தை எடுத்துக்காட்டுகிறது. உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:

“விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்து 60 நாட்களுக்கு மேலாகத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் அமைதியான முறையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலகட்டப் போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்பும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாத மத்திய அரசு, தற்போது டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், அவர்கள் மீது தடியடி நடத்தியும் உள்ளது கண்டிக்கத்தக்கது.

விவசாயிகள் மீது குடியரசு தினத்தில் நடத்தப்பட்ட காவல்துறையின் தாக்குதல் உலக அரங்கில் நமது நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் பாஜக அரசின் காட்டுமிராண்டித் தனத்தை எடுத்துக்காட்டுகிறது. உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்”.

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in