நீலகிரி மாவட்டத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ.1.28 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நீலகிரி மாவட்டத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ.1.28 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Published on

உதகையில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 40 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரத்து 780 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியேற்றினார். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வி.சசிமோகன் உடனிருந்தார். தொடர்ந்து காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். இந்த அணிவகுப்பில் காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்புத்துறை, பள்ளி மற்றும் கல்லூரி என்.சி.சி., மாணவ, மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகள் மூலம் 40 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரத்து 780 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார். .

தொடர்ந்து விழாவில் தோடர், கோத்தர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in