

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழகத்தில் இருந்தே விரட்டுவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணத்தில் நேற்று முன்தினம் இரவு தேமுதிக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஏழை, எளிய மக்கள், தமிழறிஞர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் விஐயகாந்த் பேசிய போது, “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஐயபாஸ்கர் தெரிவித்துவிட்டு, பின்னர் அது மர்மக் காய்ச்சல் என்று சொல்கிறார். மர்மக் காய்ச்சல் என்றால் என்ன என்று அதன் மர்மத்தை விளக்க வேண்டும். விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத அரசாக அதிமுக அரசு உள்ளது. அதிமுகவும் திமுகவும் மக்களை வஞ்சிக்கும் கட்சிகளாகத்தான் உள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளையும் தமிழகத்திலிருந்து அகற்றுவோம்” என்றார்.