

*
அதிமுக மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அவைத் தலைவராக மதுசூதனனும் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரன், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வளர்மதி உள்ளிட்ட 11 பேர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக உட்கட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி இந்த ஆண்டு மே வரை நடந்தது. செப்டம்பர் முதல் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. கடந்த மாதம் 7-ம் தேதி 50 மாவட்டங்களுக்கான செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாநில நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அதிமுகவின் பொதுச் செயலாள ராக நான் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டேன். இதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் அவைத் தலைவராக இ.மதுசூதனன், பொருளாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்தி லிங்கம், எடப்பாடி.கே.பழனிச்சாமி, பி.பழனியப்பன் ஆகியோரும் தலைமை நிலையச் செயலாளராக அமைச்சர் பி.பழனியப்பனும் இலக் கிய அணிச் செயலாளராக அமைச் சர் பா.வளர்மதியும், ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலாளராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக அ.தமிழ்மகன் உசேன், கொள்கை பரப்புச் செய லாளராக மு.தம்பிதுரை, துணைச் செயலாளராக நாஞ்சில் சம்பத், விவசாய பிரிவு தலைவராக துரை கோவிந்தராஜன், அண்ணா தொழிற்சங்கத் தலைவராக தாடி ம.ராசு, செயலாளராக ஆர்.சின்னசாமி எம்எல்ஏ, சிறுபான்மை யினர் நலப்பிரிவு தலைவராக ஏ.ஜஸ்டின் செல்வராஜ், செயலாளராக ஏ.அன்வர்ராஜா எம்.பி., மருத்துவ அணி செயலா ளராக நாடாளுமன்ற குழு தலைவர் பி.வேணுகோபால், வழக்கறிஞர் பிரிவு தலைவராக வி.எஸ்.சேது ராமன், செயலாளராக மாநிலங் களவை குழு தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள் ளனர்.
மீனவர் பிரிவு செயலாளராக கே.கே.கலைமணி, இணை செயலாளராக எஸ்.ஜெனிபர் சந்திரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளராக ஆர்.கமலக்கண்ணன், மகளிர் அணி செயலாளராக எல்.சசிகலா புஷ்பா எம்.பி., இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக ப.குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளராக எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக அஸ்பயர் கே.சுவாமிநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக வி.அலெக்சாண்டர், விவசாய பிரிவு செயலாளராக பி.கே.வைரமுத்து எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக தேர்தல் பிரிவு செய லாளராக அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப் பட்டுள்ளார். அமைப்புச் செயலாளர்களாக சி.பொன்னை யன், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், விசாலாட்சி நெடுஞ்செழியன், செ.செம்மலை, அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.ராஜூ, குளித்தலை எம்எல்ஏ எ.பாப்பா சுந்தரம், நாகை எம்பி கே.கோபால், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எஸ்.வளர்மதி, தூத்துக்குடி எம்பி ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா மற்றும் ப.குமார் எம்.பி. ஆகியோர் கட்சி மனுக்கள் பரிசீலனை குழு உறுப்பினர்களாகவும் நியமிக் கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
பதவி பறிப்பு
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளராக சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன் இருந்தார். தற்போது அவரிடம் இருந்து தேர்தல் பிரிவு செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவரான உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடம் வழங்கப் பட்டுள்ளது.