முருகனின் அருளால் தேர்தலில் வெற்றி பெறுவோம்: திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நம்பிக்கை

முருகனின் அருளால் தேர்தலில் வெற்றி பெறுவோம்: திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நம்பிக்கை
Updated on
1 min read

முருகனின் அருளால் தேர்தலில் வெற்றி பெறுவோம் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி தென்னூரில் நடை பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பேரணி, பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: கிராம சபைக் கூட்டத்தை நடத்தினால் முதியோர் உதவித்தொகை, பட்டா, குடிநீர் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்பார்கள், அரசுக்கு கெட்ட பெயர் வரும் என்பதால், ஒட்டுமொத்தமாக கிராம சபைக் கூட்டங்களையே நடத்தாமல் உள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இந்தி, ஆங்கில எழுத்துகள் மட்டுமல்ல, மறைந்த முதல்வர் அண்ணாவின் படம்கூட இடம் பெற்றுள்ளது என்றார்.

அப்போது, மு.க.ஸ்டாலின் வேல் வைத்திருந்தாலும் அவருக்கு முருகன் அருள்தர மாட்டார் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கே.என்.நேரு “அருள் தருவதற்கு, முதல்வருக்கு மட்டும் முருகன் ஸ்பெஷல் பாஸ்போர்ட்டா கொடுத்துள்ளார்? அதே முருகன் எங்களுக்கும் பாஸ்போர்ட் கொடுத்துள்ளார். யாருக்கு அருள் தர வேண்டும், தரக்கூடாது என முடிவெடுக்க வேண்டியது முருகன். முருகன் எங்களுக்கு அருள் தருவார். நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in