

சென்னை மாநகராட்சி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: சென்னை மாநகரப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகளை மண்டல வாரியாக அரசு நியமித்துள்ளது.
1-வது மண்டலத்துக்கு எல்.நிர்மல்ராஜ், 2-வது மண்டலத்துக்கு ந.வெங்கடேஷ், 3-வது மண்டலத்துக்கு வெ.சந்திர சேகரன், 4-வது மண்டலத்துக்கு ராஜேந்திர ரத்னூ, 5-வது மண்ட லத்துக்கு பு.உமாநாத், 6-வது மண்டலத்துக்கு சி.காமராஜ், 7-வது மண்டலத்துக்கு க.லதா. 8-வது மண்டலத்துக்கு தா.கார்த்தி கேயன், 9-வது மண்டலத்துக்கு காகர்லா உஷா, 10-வது மண்டலத்துக்கு சா.விஜயராஜ் குமார், 11-வது மண்டலத்துக்கு ஆர்.கிர்லோஷ்குமார், 12-வது மண்டலத்துக்கு க.மணிவாசன், 13-வது மண்டலத்துக்கு சீ.ஸ்வர்ணா, 14-வது மண்டலத் துக்கு ஆர்.பழனிசாமி, 15-வது மண்டலத்துக்கு ஆ.கார்த்திக் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடை பெற்றது.
மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தலைமை வகித்தார். அதிக அளவு தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களுக்கு தேவையான உணவுப் பொட்டலங்கள் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும், சாலை போக்குவரத்தை சீர் செய்யவும், மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிறை வேற்றவும், இயல்பு நிலை திரும்பவும் நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.