

தி.மலை நகரில் நேற்று பல்வேறு இடங்களில் கடுமையான போக்கு வரத்து ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை நகரில் நேற்று பிரதான சாலைகளில் வழக் கத்துக்கு மாறாக கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தை மாதம் முகூர்த்தம் என்பதால், அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், சின்னக்கடை வீதியிலும் போக்கு வரத்து நெரிசல் இருந்தது.
மேலும், அவலூர்பேட்டை சாலையில் அலைமோதியது. திண்டிவனம் சாலையில் மேம் பாலம் கட்டும் பணி நடைபெறுவ தால் விழுப்புரம் மற்றும் சென்னை செல்லும் வாக னங்கள் அவலூர்பேட்டை சாலை வழியாக புறவழிச் சாலையை சென்றடைகிறது. இதனால், அவ லூர்பேட்டை சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டதாலும், வேலூர் – விழுப்புரம் இடையே ரயில் சென்றபோது ரயில்வே ‘கேட்’ மூடப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.
இதன் எதிரொலியாக ரயில்வே ‘கேட்’டின் இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனிடையே, ஆட்டோக்கள், கார்கள் மற்றும் வேன்கள் போன்ற சிறிய வாகனங்கள், வரிசை பாதையை தவிர்த்து முந்தி செல்ல முயன்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு காவலர்களும்இல்லாததால் நிலைமை மோச மடைந்தது.
இதனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் வேலூர் சாலை வழியாக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டன. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.
இந்நிலையில், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் தொடர்ச்சியாக வெளி யேறியதால் நேற்று பகல் 12.45 மணியளவில் போளூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வேலூர் சாலை மற்றும் அவலூர்பேட்டை சாலையில் வாக னங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து சரி செய்ய காவல் துறையினரும் இல்லாததால், இரு சக்கர வாகனங்கள் முதல் அனைத்து வகையான வாகனங் களும் முந்திச் செல்ல முயன்றது. இதன்காரணமாக, போக்குவரத் தின் பாதிப்பு மேலும் மோச மடைந்தது.
இதையடுத்து, மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்த போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்து சரி செய்தார். இதனால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘போக்குவரத்து பாதிப்பை தடுக்க தகுந்த நட வடிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.