புதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற அனுமதித்தால் தமிழக வீட்டையும் எரித்துவிடும்: எம்.பி. ரவிக்குமார் பேச்சு 

புதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற அனுமதித்தால் தமிழக வீட்டையும் எரித்துவிடும்: எம்.பி. ரவிக்குமார் பேச்சு 
Updated on
1 min read

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் உள்ளோரை இழுத்து சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து மதவெறி அரசை அமைக்க பாஜக முயல்கிறது. புதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற அனுமதித்தால் தமிழக வீட்டையும் எரித்துவிடும் என்று எம்.பி.யும், எழுத்தாளருமான ரவிக்குமார் தெரிவித்தார்.

புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் குடியரசு தினத்தில் தொடங்கி மகாத்மா காந்தி நினைவு நாளான வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி 1 லட்சும் துண்டுப் பிரசுரங்கள் புதுச்சேரி முழுக்க வழங்கப்பட உள்ளது. துண்டுப் பிரசுரத்தை விழுப்புரம் எம்.பி. எழுத்தாளர் ரவிக்குமார் இன்று வெளியிட்டார். அதை அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் பாலமோகனன், ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பெற்றனர்.

இந்நிகழ்வில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் பேசியதாவது:
"பல மாநிலங்களில் சட்ட விரோதமாக ஆட்சியை பாஜக கைப்பற்றியது. தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் அதே முறையில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், தமிழகம், புதுச்சேரியில் பாஜகவால் கால் ஊன்ற முடியவில்லை.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் உள்ளோரை இழுத்து சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து மதவெறி அரசை அமைக்க முற்படுகின்றன. புதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற அனுமதித்தால் தமிழக வீட்டையும் எரித்துவிடும். மதவாதத்தைத் தடுக்க முதல் கட்டமாக சமூக நல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம் என்ற பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி 1 லட்சம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க உள்ளனர். மதவெறியிடமிருந்து புதுச்சேரி, தமிழகத்தைக் காக்கவே இம்முயற்சி''.

இவ்வாறு எம்.பி.யும், எழுத்தாளருமான ரவிக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in