Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

கூட்டணி குறித்து முடிவெடுப்பதில் அதிமுக தாமதம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்து பேச முடியும் என அதிமுக தாமதிக்கிறது என்று தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேமுதிக ஒன்றியச் செயலாளர் சமுத்திரபாண்டி இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்து பேச முடியும் என அதிமுக தாமதிக்கிறது. விரைவில் உயர்நிலைக் குழு அமைத்துகூட்டணி குறித்த பேச்சுவார்த் தைகளை தொடங்கினால் வெற் றிக்கான வழிவகை ஏற்படும்.

சசிகலா மீண்டு வரவேண்டும்

சசிகலா உடல்நலம் பெற்று மீண்டு வரவேண்டும். அவரை அதிமுகவினர் ஏற்பது அல்லது ஏற்காதது அவர்களின் நிலைப்பாடு. அதில் நான் தலையிட முடியாது.

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிதான் வெற்றிபெறும். இறுதிக்கட்ட வாக்குச்சேகரிப்பின்போது விஜய காந்த் பிரச்சாரத்துக்கு வருவார். தேர்தல் எப்போது வந்தாலும் தேமுதிக சந்திக்கத் தயாராக உள்ளது.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் 30-ம் தேதி முக்கிய ஆலோசனை

சென்னை: தேமுதிகவின் மண்டல, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் வரும் 30-ம் தேதி நடக்கவுள்ளது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர்.

தமிழகசட்டப்பேரவை தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தேமுதிக நியமித்துள்ளது. அத்துடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உட்பட 7 மண்டல தேர்தல் பொறுப்பாளர்களும், 70-க்கும் மேற்பட்ட மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணியை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டப்பேரவைத் தேர்தலுக்காக புதியதாக நியமிக்கப்பட்ட மண்டல, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் 30-ம் தேதி காலை 10.45 மணிக்கு நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. கூட்டணி, தேர்தல் பணிகள், தேமுதிகவுக்கு செல்வாக்கான தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x