சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நம்பிக்கை

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நம்பிக்கை
Updated on
1 min read

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந் தது. அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் வருவதால் மு.க.ஸ்டா லின் வேல் பிடித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற அலகு குத்தி, தீ மிதிக்கவும் அவர் தயாராக உள்ளார். தேர்தல் முடிந் ததும் பகுத்தறிவு பேசுவார்.

பசும்பொன் சென்றிருந்தபோது தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை கீழே கொட்டினார். குங்குமம் பூசினால் அழிப்பது, விபூதி கொடுத்தால் வீசுவது போன்ற மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதிமுக அரசு தைப் பூசத்துக்கு விடுமுறை அளித் துள்ளது. நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதனால் பேரவைத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பழனிசாமி மீண்டும் முதல்வராவார் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in