Last Updated : 24 Jan, 2021 07:57 PM

 

Published : 24 Jan 2021 07:57 PM
Last Updated : 24 Jan 2021 07:57 PM

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம்: கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் என்று சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டவர்களை ஹீரோவாக்க வேண்டாம்’ என கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”ராஜீவ்காந்தி கொலையில் குற்றவாளிகள் என்று சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டவர்களை ஹீரோவாக்க வேண்டாம். ராஜீவ்காந்தியுடன் உயிரிழந்த மற்ற தமிழர்களை பற்றி யாரும் பேசுவது கிடையாது.

மேலும் தண்டனை பெற்றவர்கள் சட்டரீதியாக விடுதலை பெற்றால் அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. போலீஸாரிடமிருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள், சட்டத்தில் இருந்து தப்பிக்க பாஜகவில் தஞ்சமடைகின்றனர்.
இதற்கு பாஜக தான் விளக்கமளிக்க வேண்டும். கமல் கட்சியின் கொள்கை, சித்தாந்தம் மதச்சார்பின்மையை சார்ந்துள்ளது. அவர் திமுக , காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என விரும்புகிறேன்.

தேர்தலில் தனித்து நின்றால் சொற்ப வாக்குகள் தான் பெறுவார். அவர் தொடர்ந்து அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால் சாதுர்யமான முடிவை எடுக்க வேண்டும். மற்ற கட்சிகள் மீது கோபமுள்ள மக்கள் நோட்டாவுக்கு பதில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை போல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும்" என்று கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x