

மதுரை திருமங்கலம் தொகுதி டி. குண்ணத்தூர் அருகே ஜெயலலிதா பேரவை சார்பில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் பொதுமக்கள் வழிபடும் வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதாக்கு திருக்கோயில் கட்டும் பணி நடக்கிறது.
சுமார் 12 ஏக்கரில் மையத்தில் காண்போர் வியக்கும் வண்ணம் கலை அம்சத்துடன் இக்கோயில் கட்டப்படுகிறது. தை பொங்கல் அன்று இருவரின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
தலா 400 கிலோ எடை கொண்ட முழு நீள வெண்கல சிலைகளும் ஏறத்தாழ 7 அடிக்கு மேல் அமைக்கப் பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளும் உருவாக்கப்படுகின்றன. இயற்கையான சூழல் ஏற்படுத்தும் விதமாக, பூங்காக்களும், தியான மண்டபங்களும் உருவாக்கப்படுகின்றன.
முதல்வர், துணை முதல்வர் ஜன., 30-ல் திறக்கின்ற னர். இதற்கான யாகசாலை பூஜைகளுக்கென 11 ஹோம குண்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. 51 சிவாச்சாரியார்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஆர் பி. உதயகுமார் செய் கிறார். மேலும், அவர் காப்பு கட்டி விரதமும் இருக்கிறார். விழாவில் அனைவரும் குடும்பத்தின ருடன் பங்கேற்கும் விதமாக திருமங்கலம் தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் அழைப் பிதழ் கொடுத்து வருகிறார். கும்பாபிஷேகத்தை
முன்னிட்டு முகூர்த்தக்கால் பந்தல் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து அமைச்சர் ஆர் பி .உதயகுமார் கூறியதாவது :
"எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்தாலும், அந்தத் தலைவர்களை தெய்வமாக தொண்டர்கள் வணங்குவதில்லை. அதிமுக இயக்கத்தில் தான் தலைவர்களை தெய்வமாக தொண்டர்கள் வணங்கு கின்றனர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மதுரை மக்களை மிகவும் நேசித்தனர். எப்போதும் மதுரை மக்கள் மீது அவர்கள் பற்றும், பாசமும் கொண்டு இருந்தனர். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை மதுரையில் தான் முதல்வர் தொடங்கினார். அந்த வகையில் மதுரையில் ஜெயலலிதாவுக்கும் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் அன்று ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் பங்கேற்று தரிசிக்க உள்ளனர். இவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் முதல்வரும், துணை முதல்வரும் வழங்குகின்றனர்" என்றார்.