இடநெருக்கடியில் காளையார்கோவில் பஸ் நிலையம்: 6 ஆண்டுகளாக கிடப்பில் புதிய திட்டம்

இடநெருக்கடியில் காளையார்கோவில் பஸ் நிலையம்.
இடநெருக்கடியில் காளையார்கோவில் பஸ் நிலையம்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பஸ்நிலையம் இடநெருக்கடியில் உள்ள நிலையில், 6 ஆண்டுகளாக புதிய பஸ் நிலையம் திட்டம் கிடப்பில் உள்ளது. காளையார்கோவிலில் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலு வலகம் தேசிய பஞ்சாலை நிறுவனம் உள்ளிட்டவை உள்ளன. இங்கு பல்வேறு பணிகளுக்காக 120 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

காளையார்கோவில் பஸ் நிலை யத்துக்கு சிவகங்கை, மதுரை, காரைக் குடி, திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டணம், தேவகோட்டை, தொண்டி, பரமக்குடியில் இருந்தும், சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்தும் தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

ஆனால் பஸ் நிலையத்திலோ ஒரே சமயத்தில் 3 பஸ்கள் மட்டுமே நிற்க முடியும். இதனால் அங்கு காரைக் குடி, பரமக்குடி மற்றும் கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மற்ற பஸ்களை சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் நெருக்கடி ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. மேலும் பஸ் நிலையத்தினுள் கடைகள், வாகன ஆக்கிரமிப்பால், பஸ்கள் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்படுகின்றன.

காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையம் பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது, இதை யடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் அமைக்க 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்தா ஊருணி, வாரச்சந்தை, செட்டியூரணி, மாந்தாளி கண்மாய் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் அதன் பிறகு நடவடிக்கை இல்லை. 2014-ம் ஆண்டு வாரச் சந்தை பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டது. அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘விரை வில் புதிய பஸ் நிலையத்துக்கு அடிக்கல் நாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது,’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in