

சென்னை சென்ட்ரலிலிருந்து மங்களூரு விற்கு இயக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (22637 / 22638), சென்னை சென்ட்ரல் மற்றும் ஆழப்புலா இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் (22639 / 22640) , சென்னை சென்ட்ரல் மற்றும் ஈரோட்டிற்கு இடையேயான ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (22649/2265O), சென்னை சென்ட்ரல் மற்றும் பழனி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (22651/22652) ஆகியவை வருகிற ஜூலை 13-ம் தேதி முதல் அதிவிரைவு ரயில்களாக இயக்கப்படவுள்ளன.
இதேபோல் திருவனந்தபுரத்திற்கும் ஷாலிமாருக்கும் இடையே இயக்கப் படும் வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் (22641), திருவனந்தபுரம் மற்றும் இந்தூர் இடையே இயக்கப்படும் அஹில்யநகரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22646) ஆகியவை வரும் ஜூலை 12 முதல் அதிவிரைவு ரயில்களாக இயக்கப்படும். எர்ணாகுளம் மற்றும் பாட்னா இடையே இயக்கப்படும் வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் (22643), திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் கோர்பா இடையே இயக்கப்படும் வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் (22648) ஆகியவை ஜூலை 14-ம் தேதி முதல் அதிவிரைவு ரயில்களாக இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் மறுமுனையை அடைந்ததும் அங்கிருந்தும் அதிவிரைவு ரயில்களாகவே இயக்கப்படும்.