முட்டை விலை 20 காசுகள் சரிவு: கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சி

முட்டை விலை 20 காசுகள் சரிவு: கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் கண்டறியப்பட்டது. இதன் எதிரொலியாக கோழி இறைச்சி, முட்டை நுகர்வு குறையத் தொடங்கியது.

இது நாமக்கல் மண்டல முட்டை வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரே வாரத்தில் முட்டை விலை 90 காசுகள் வீதம் சரிந்தது. இதன்படி 510 காசுகள் இருந்த முட்டை 420 காசுகளாக சரிந்தது. இச்சூழலில் பண்டிகை காலம் உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை மீண்டும் 5 காசுகள் ஏற்றம் கண்டு 425 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பறவைக்காய்ச்சல் பீதியால் அச்சத்தில் இருந்த கோழிப்பண்ணையாளர்கள் முட்டைவிலை ஏற்றத்தால் சற்று ஆறுதல் அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் முட்டை விலை 20 காசுகள் வீதம் சரிந்து 405 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அருகே உள்ள பிற மண்டலங்களில் முட்டை விலை குறைக்கப்பட்டதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டது என கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். எனினும், நேற்று ஒரே நாளில் முட்டை விலை 20 காசுகள் சரிந்தது கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in