Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

கால்நடைத் துறையின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.1,464 கோடி நிதி வழங்க வேண்டும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை

கால்நடைத் துறையின் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.1,463 கோடியே 86 லட்சம் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலைராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வந்துள்ள மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்தார். அப்போது, பல்வேறு திட்டங்களுக்கு நிதி கோரும் மனுவை வழங்கினார்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் கோழியினங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாக புதிய 3 பிளஸ்தரம் கொண்ட உயிரியல் பாதுகாப்புஆய்வகத்தை தமிழகத்தில் நிறுவ ரூ.103 கோடியே 45 லட்சம், கோமாரி நோய் தடுப்பூசி ஆய்வகத்தை ராணிப்பேட்டையில் நிறுவ ரூ.146 கோடியே 19 லட்சம், ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.64 கோடியே 54 லட்சம், கால்நடைகள் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்த ரூ.69 கோடியே 92 லட்சத்தில் தாதுஉப்புக் கலவை உற்பத்தி ஆலை, ரூ.87 கோடியே 33 லட்சத்தில் உறைவிந்து உற்பத்தி ஆலை,

புதிய கால்நடை நிலையங்கள் கட்டவும், உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தவும் ரூ.311 கோடியே 31 லட்சம், கால்நடை நோய் கண்டறிதல் வசதிகளை மேம்படுத்த ரூ.22 கோடியே 94 லட்சம், மருந்து சேமிப்பு கிடங்குகள் நிறுவ ரூ.63 கோடியே 65 லட்சம்,நவீனமயமாக்கப்பட்ட நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை அமைக்க ரூ.102 கோடியே 76 லட்சம், கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்துக்கு ரூ.185 கோடியே 71 லட்சம், நடமாடும் கால்நடை மருத்துவ சேவையை வழங்க ரூ.90 கோடியே9 லட்சம் என ரூ.1,254 கோடியே 22 லட்சம் நிதி வழங்க வேண்டும்.

இதுதுவிர, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் வாயிலாக உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க, தீவனத்தை சிறந்த முறையில் உபயோகிக்க, உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.209 கோடியே 64 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x