

அதிமுகவுக்கும், இரட்டை இலைக்கும் சசிகலா துரோகம் செய்ய மாட்டார் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ் கட்சி, கமல்ஹாசனை கூட்டணிக்கு அழைப்பது நகைப்பாக உள்ளது. புதுச்சேரியில் காங்கிரசுடனான கூட்டணியை முறிப்பதற்கான முன்னோட்டமாக ஜெகத்ரட்சகனை மேலிட பார்வையாளராக திமுக அறிவித்திருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் கூட்டணியை திமுக முறித்துக்கொண்டால், அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
சசிகலாவின் பின்னணியில் ஆயிரம் பேர் இருந்தாலும் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இருந்த நட்பு ஈடில்லா சிறப்பு வாய்ந்தது. அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் நினைவாக உள்ளதால், அதற்கு எதிராக சசிகலா துரோகம் செய்யமாட்டார். அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்பது சசிகலாவுக்கு தெரியும் என்றார்.