

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக காலிமனை, கடை, வீடு உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளில் வாடகைதாரர்கள் வசித்து வருகின்றனர். கோயிலுக்கு சொந்தமாகவள்ளுவர் கோட்டம் நெஞ்சாலையில் உள்ள 15 கிரவுண்ட் நிலத்தில் வணிகரீதியான கட்டிடங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவை கட்டப்பட்டிருந்தன. இதில், வசித்து வரும்வாடகைதாரர்கள் 30 ஆண்டுகளாக வாடகை கட்டாமல் இருந்து வந்துள்ளனர். அவர்கள் ரூ.11 கோடிவாடகை பாக்கி தர வேண்டியிருந்தது. வாடகை பாக்கியை தரும்படி பலமுறை கேட்டும் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, நடைபெற்ற விசாரணையில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், கோயில் சொத்துகளை மீட்ககடந்த டிசம்பர் 16-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றி சொத்துகளை மீட்க சென்றனர். அப்போது அந்த கட்டிடங்களில் வசிப்பவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்துஅப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, போலீஸார்,வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அறநிலையத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சொத்துகளை சுவாதீனம் எடுத்தனர்.