

துவரம் பருப்பை பதுக்குவோர் மீதான அரசின் நடவடிக்கை கடுமையாக இருந்தால் மட்டுமே பருப்பு விலை குறையும் என்று தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் துவரம் பருப்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் அறுவடை முடிந்து, இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவரம் பருப்பு சந்தைக்கு வந்திருக்க வேண்டும். அந்த மாநிலங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பருவ மழை குறைவால், இந்த ஆண்டு சந்தைக்கு துவரம் பருப்பு வரத்து குறைவாகவே இருந்தது.
இதனால் கடந்த பிப்ரவரி மாதம் கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப் பட்டு வந்த துவரம் பருப்பின் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.225-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் துவரம் பருப்பு பதுக்கல் தொடர்பாக நடத் தப்பட்ட சோதனையில் 5 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது: தற்போது இந்திய துவரம் பருப்பு மொத்த விலையில் கிலோ ரூ.200-க்கு கிடைக்கிறது. அது சில்லறை விலையில் பாக்கெட்டில் அடைக்கப்பட்டது ரூ.225-க்கும், பாக்கெட்டில் அடைக்கப்படாதது ரூ.210-க்கும் விற்பனை செய்யப் படுகிறது.
உற்பத்தி குறைவை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆன்லைன் வர்த்தகம் மூலமாக பருப்பு பதுக்கப் படுவதாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. முதலில் ஆன் லைன் வர்த்தகம் மூலம் உணவுப் பொருள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். அதை முன்பு மத்தியில் ஆண்டுவந்த காங்கிரஸ் அரசு செய் தது. தற்போதுள்ள அரசு, உணவுப் பொருட்களை ஆன்லைன் வர்த் தகத்தில் அனுமதித்து, விலை உயர்வை வேடிக்கை பார்த்து வருகிறது.
தற்போது நாடு முழுவதும் பதுக் கப்பட்ட 5 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. சோதனையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். பருப்பு பதுக்குவோர் மீதான அரசின் நடவடிக்கை கடுமை யாக இருக்க வேண்டும். பதுக்கல் பருப்பை மீட்க வேண்டும். இவற்றை செய்தால் மட்டுமே பருப்பு விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.