Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM

தி.மலை அரசு அருங்காட்சியக நுழைவு வாயிலில் பொதுமக்களை வரவேற்கும் வகையில் பெருங்கற்கால தாய் தெய்வம் சிலை மாதிரி வடிவமைப்பு

திருவண்ணாமலை அரசு அருங்காட்சியக நுழைவு வாயிலில் அமைக்கப்படும் பெருங்கற்கால தாய் தெய்வத்தின் பெரிய அளவிலான மாதிரி சிலை.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தின் பெரு மையை பறைசாற்றும் வகையில் அமையவுள்ள அரசு அருங்காட்சிய கத்தின் நுழைவு வாயிலில் 3 ஆண் டுகள் பழமையான பெருங்கற்கால தாய் தெய்வ சிலையின் மாதிரியை நிறுவியுள்ளனர்.

தமிழகத்தின் பெரிய பரப்பளவு கொண்ட மாவட்டமாக தி.மலை உள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் புதிய கற்காலம் தொடங்கி சமகால வரலாற்றுடன் தொடர்பு கொண்டது. பிரசித்திப் பெற்ற அண்ணாமலையார் கோயில்தீபத் திருவிழா ஆன்மிக ரீதியாக புகழ்பெற்றதாக இருந்தாலும், பல்லவர்கள், சோழர்கள், விஜய நகர மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

தி.மலை மாவட்டத்தில் நடத்தப் பட்ட ஆய்வில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட நடுகற்கள், கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. பாடல்பெற்ற கோயில்கள், புகழ் பெற்ற பாறை ஓவியங்கள், பல்லவர் கால குடைவரை கோயில் கள் என வரலாற்றின் எச்சங்கள் அதிகம் நிறைந்த மாவட்டமாக தி.மலை உள்ளது. எனவே, தி.மலை மாவட்டத்தின் பழமையு டன் வரலாறு, கலை, பண்பாட்டை பறைசாற்றும் வகையில், அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

அதன்படி, தி.மலை-போளூர் சாலையில் சுமார் 23 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அரசு அருங் காட்சியகம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. ரூ.84 லட்சம் மதிப்பில் அமையவுள்ள அருங் காட்சியகத்தில் மாவட்டத்தின் கலை, சமூகம், பொருளாதாரம் என 7 வகையான காட்சி அரங்குகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்படவுள்ளன.

பெருங்கற்கால தாய் தெய்வம் சிலை

தமிழகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் பொதுமக்களை வரவேற் கும் வகையில், பெரிய அளவிலான சிலைகள் வைக்கப்படுவது வழக் கம். அந்த வகையில், தி.மலை அரசு அருங்காட்சியக நுழைவு வாயிலில் பொதுமக்களை வரவேற்கும் வகையில், அருங்காட்சியக ஆணையர் சண்முகம் பரிந்துரை யின்பேரில் 10 அடி உயரமுள்ள பெருங்கற்கால தாய் தெய்வ சிலையை வைக்கவுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி மோட்டூர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால மனிதர்கள் வழி பட்ட தாய் தெய்வ சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள தாய் தெய்வ சிலையின் மாதிரியைக் கொண்டு இந்த தாய் தெய்வம் சிலையை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்து அருங்காட்சியக அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘அருங்காட்சியகத்தில் நுழைந்ததும் உள்ள பெரிய திரையில் மாவட்டத்தின் பல்வேறு வரலாற்று தகவல்களை படக் காட்சிகள் மூலம் பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும். மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள், அண்ணா மலையார் கோயிலின் சிறப்புகள், ஜடேரியில் நாமக்கட்டி தயாரிப்பு, முடையூர் மாக்கல் சிலை வடிப்பு, ஆரணி பட்டு நெசவு, ஜவ்வாது மலையில் பயிரிடப்படும் தானியங் கள், ஓவியங்கள், பழமையான நாணயங்களும் காட்சிப்படுத்தப் படும். தமிழகத்தில் பெருங்கற்கால தாய் தெய்வம் சிலை இந்த மாவட்டத்தில்தான் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இந்த பெருமையை பறைசாற்றவே அரசு அருங்காட் சியக நுழைவு வாயிலில் அதன் மாதிரியை பெரிய அளவில் வைக்கப்படுகிறது’’ என தெரிவித்தனர்.

தி.மலை மாவட்டம் வரலாற்றுஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் கூறும்போது, ‘‘தமிழக வரலாற்றில் செங்கம் நடுகற்கள் சிறப்பு பெற்றது. மிகப்பெரிய மாவட் டத்தின் வரலாற்றை எதிர்கால இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்த அருங்காட்சியகம் அமையும்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆன்மிக தொடர்புடன் வரலாற்று டன் தொடர்புகொண்டது. அருங்காட்சியத்துக்கு வரும் பொது மக்கள் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சென்று வர ஒரு அருங்காட்சியகம் உந்துதலாக இருக்கும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x