ஏழைக் குடும்பங்களின் வருமானத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்துவதே நோக்கம்: சிவகங்கையில் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பேச்சு

மானாமதுரையில் அக்குவா அக்ரி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மானாமதுரையில் அக்குவா அக்ரி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Updated on
1 min read

‘‘ஏழைக் குடும்பத்தின் வருமானத்தை குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரமாக உயர்த்துவதே நோக்கம்,’’ என மத்திய கால்நடை மீன்வளம் மற்றும் பால், மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

அவர் இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அக்குவா அக்ரி என்ற தனியார் நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட கடற்பாசி இயற்கை குருணை உரத்தை அறிமுகப்படுத்திப் பேசியதாவது: மீனவர்கள், ஏழைகளின் வருமானத்தைப் பெருக்க பிரதமர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மானாமதுரையில் 6 ஆயிரம் டன் கடற்பாசி மூலம் உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதை 6 லட்சம் டன்னாக உயர்த்துவதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும். தற்போது கடற்பாசி மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடற்பாசி தொழில் மூலம் ஒரு குடும்பத்தின் வருமானத்தை குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பதே எனது ஆசை.

பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் கோதுமை, நெல் சாகுபடி செய்கின்றனர். அவர்கள் அதிக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.இதனால் அவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக அதிகளவில் புதுடெல்லிக்கு வருகின்றனர்.

கடற்பாசி உரத்தைப் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் ரசாயன உரத்தை கைவிட நினைக்கின்றனர். இதையடுத்து இயற்கை உரங்கள் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன, என்று கூறினார்.

நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மீன்வளத்துறை இயக்குநர் ஜெ.ஜெயகாந்தன் உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in