

விழுப்புரம் அருகே பாமக ஒன்றிய செயலாளர் கொலை செய்யப்பட் டதைக் கண்டித்து நடந்த சாலை மறியலில், பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தினர்.
விழுப்புரம் அருகே கண்டமங்க லத்தைச் சேர்ந்த பிச்சாண்டி என்ப வரது மகன் அருள்மணி (32). இவர் கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய பாமக செயலாளராக இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு புகார் தொடர்பாக கண்டமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் அருள்மணியை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இதில் நிலைகுலைந்து போன அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த பாமகவினர், கொலையாளிகளை கைது செய்யக் கோரி கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகே நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு பஸ்ஸை கல் வீசி தாக்கினர்.
இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதற்கிடையே நேற்று திண்டி வனம் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி தாவூத் அம்மாள் முன்னிலையில், வினோத் குமார், நவின்குமார் ராமசந்திரன், சதீஷ் ஆகியோர் சரணடைந்தனர்.